இட்லி மாவு செய்வது எப்படி | How to make Idli Batter

Share it:

இட்லி மாவு செய்வது எப்படி | How to make Idli Batter

இட்லி / Idli

குறிப்பு : 12 முதல் 15 இட்லி தயார் செய்ய

தேவையான பொருட்கள் :

  • புழுங்கல் அரிசி - 300 கிராம்
  • உளுந்தம் பருப்பு - 75 கிராம்
  • உப்பு - 1 சிட்டிகை

செய்முறை விளக்கம் :

 அரிசி போடும் அளவிற்கு நாலில் ஒரு பாகம் உளுந்தம்பருப்பு போட வேண்டும்.

 அரிசியை நன்றாகத் தண்ணீர் விட்டு நன்றாக நனைய வைத்து உரலில் இட்டு நன்றாக ஆட்டவும்.

 உளுந்தப்பருப்பையும் நன்றாக நனைய வைத்து அதையும் உரலில் இட்டு, தண்ணீர் தெளித்து வெண்ணெய் போல் ஆட்டவும்.

 இரண்டு மாவுகளையும் உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து சுமார் 3 மணிநேரம் முதல் 6 மணிநேரம் புளிக்க வைத்து, இட்லி தட்டிவிட்டு வேக வைக்கவும். இட்லி மாவையே தோசைக்கும் உபயோகப்படுத்தலாம் தோசைக்கு அரிசியின் அளவில் மூன்றில் ஒரு பாகம் உளுந்தம் பருப்பு போட்டால் தோசை மிகவும் மிருதுவாக இருக்கும்.

 இட்லிக்கு உளுந்தும், பருப்பு புதிய பருப்பு என்றால் சற்று குறைத்துப் போட்டால் நல்லது.


மசாலா இட்லி செய்வது எப்படி என்று அறிய இப்பதிவை தொடரவும்

நன்றி 🙏
Share it:
Next
Newer Post
Previous
This is the last post.

Batter

Breakfast Recipes

Classic

Dinner Recipes

Healthy

Idli

Indian Cuisine

Indian Recipes

Veg

Post A Comment: