மீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast

Share it:

மீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast

மீன் ரோஸ்ட் / Fish Roast


தேவையான பொருட்கள் :

  • மீன் (துண்டுகள்) - 500 கிராம்
  • மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  • தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  • எலுமிச்சைப்பழம் - 1
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் (நல்லெண்ணெய்) - 300 மில்லி

    செய்முறை விளக்கம் :

      மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும், மிளகுத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்த்தூள், தேவையான அளவு உப்பு, எலுமிச்சைப்பழ சாறு இவற்றை கலந்து மீன் துண்டுகள் மீது தடவி
    30 நிமிடங்கள் ஊறவிடவும்.

      அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் மீன் துண்டுகளைப் போட்டு பொறித்து எடுத்து உபயோகிக்கவும்.


    மீன் ரோஸ்ட் (Tips) :


    1. மீன் துண்டுகள் மீது எலுமிச்சைபழச்சாறு ஊற்றி ஊற வைத்தால் மீன் மிருதுவாக ஆகிவிடும் மற்றும் செரிமான பிரச்சனை ஏதும் இருக்காது.
    2. (விருப்பப்பட்டால்) 2 முட்டைகள் அடித்து ஊற்றி மீனை அதில் நனைத்து எடுத்தும் வறுக்கலாம்.
    3. நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி , எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.



    நன்றி 🙏
    Share it:

    Fish

    Fish Recipes

    Fry

    Indian Recipes

    Masala

    Non Veg

    Side Dish

    Spicy

    Post A Comment: