முட்டை பிரட் மசாலா ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Egg Bread Roast
- பிரட் - 2
- முட்டை - 2
- வெங்காயம் - சிறிதளவு
- இஞ்சி - சிறிதளவு
- மிளகுத்தூள் - சிறிதளவு
- பால் - 100 ml
- எண்ணெய் (அல்லது) நெய் - 50 ml
- பச்சை மிளகாய் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள்பொடி - சிறிதளவு
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை விளக்கம் :
முதலில் மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அரைத்து மசாலாவில் சிறிது உப்பு போட்டு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கலக்க வேண்டும், பிறகு அதில் பால் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
தோசை கல் (அல்லது) தவாவில் எண்ணெய் (அல்லது) நெய்யை ஊற்றி, பிரட்டை முட்டை கலவையில் தேய்த்து எடுத்து தவாவில் போடவும்.
ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கமும் சிவக்க எடுக்க வேண்டும். முட்டை பிரட் மசாலா ரோஸ்ட் ரெடி இது சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கலாம் இது சத்து மிகுந்தது.

முட்டை பிரட் மசாலா ரோஸ்ட் (Tips) :
- பிரட் ரோஸ்ட்யை மிதமாக வேக வைத்து கரிந்து போகாமல் எடுத்தால் மிக சுவையாக இருக்கும்.
- பிரட் ரோஸ்ட் கல்லில் வெந்து கொண்டு இருக்கும்போது சிறிது நெய் ஊற்றி வேக வைத்தால் மனமும் ருசியும் அதிகரிக்கும்.
நன்றி 🙏
Post A Comment: