தந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken

Share it:

தந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken

தந்தூரி சிக்கன் / Tandoori Chicken


தேவையான பொருட்கள் :

 • கோழி - 1 கிலோ
 • தயிர் - 6 மேஜைக்கரண்டி
 • மஞ்சள்தூள் - சிறிதளவு
 • இஞ்சி (அரைத்த) - தேவையான அளவு
 • பூண்டு (அரைத்த) - தேவையான அளவு
 • எண்ணெய் - 150 ml
 • மிளகாய்த்தூள் - 25 கிராம்
 • தந்தூரி மசாலா - சிறிதளவு
 • எலுமிச்சைப்பழம் - 2
 • டால்டா - 50 கிராம்
 • மிளகுத்தூள் - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு
 • சிகப்பு கேசரி பவுடர் - 1/4 தேக்கரண்டி

செய்முறை விளக்கம் :


  கோழியை தோல் உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி, கத்தியால் கோழிக்கறியை சிறிது ஆழமாக கீறிவிடவும் மசாலா நன்றாக ஊறுவதற்க்கு. அதில் எலுமிச்சைபழச்சாறு பிழிந்து, தயிர், மிளகுத்தூள், கேசரி பவுடர், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், தந்தூரி மசாலா, உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து 6 மணிநேரம் ஊற வைக்கவும்.

  அடுப்புக்கரியை பெருக்கி கறியை சுத்தமான ஸ்டீல் கம்பியில் குத்தி தணலில் சுட்டு எடுக்கவும் ஒரு ப்ளேட்டில் டால்டா ஊற்றி ஒவ்வொரு கறியாக சுடவும்.

  ஒரு முறை சுட்டக் கறியை பிரட்டி மறுபடியும் கம்பியில் மாட்டி கறியை நன்றாக எல்லாப் பக்கமும் வேக விடவும். இதே போல் மற்ற எல்லாக் கறித்துண்டுகளையும் தயாரிக்கவும், தந்தூரி சிக்கன்யை சுற்றி சிறிது கரிந்து பழுப்பு நிறத்தில் காட்சி அளித்தால் தந்தூரி சிக்கன் உண்பதற்கு தயார் என்று அர்த்தம்.

தந்தூரி சிக்கன் (Tips) :


 1. தந்தூரி சிக்கன் தணலில் வேகும் பொது, அதன் மேல் சிறிது தேன் ஊற்றலாம், இது காரம் மற்றும் இனிப்பு கலந்த சுவை குடுக்கும்.
 2. தந்தூரி சிக்கன்னில் காரம் கூடுதலாய் சேர்த்தால் அதன் சுவை அதிகமாய் இருக்கும்.
 3. ஓவெனில் செய்பவர்கள் 325°F வேக வைக்கவும், தந்தூரி சிக்கன் தயார் ஆக 20 - 40 நிமிடங்கள் ஆகும்.நன்றி 🙏
Share it:

Chicken

Chicken Recipes

Indian Cuisine

Indian Recipes

Masala

Non Veg

North Indian Cuisine

North Indian Recipes

Roast

Spicy

Post A Comment: