சிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai

Share it:

சிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai

சிக்கன் கடாய் / சிக்கன் கராஹி | Chicken Karahi / Chicken Kadaai


தேவையான பொருட்கள் :

  • நாட்டுக்கோழிகறி - 500 கிராம்
  • பச்சை மிளகாய் - சிறிதளவு
  • வெங்காயம் - சிறிதளவு
  • இஞ்சி - சிறிதளவு
  • பூண்டு - சிறிதளவு
  • ரீபைண்ட் ஆயில் - 100 ml
  • தக்காளி - 500 கிராம்
  • கரம் மசாலா - சிறிதளவு
  • வெந்தயம் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை விளக்கம் :


  கோழியை நன்றாக சுத்தம் செய்து, பெரியதுண்டுகளாக வெட்டவும். தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் தக்காளியையும் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கொதி வந்தவுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சிப் போட்டு கிளறவேண்டும்.

  பிறகு கோழிக்கறியை சேர்த்து எண்ணெய்யில் சுருள வேக விட வேண்டும். சிக்கன் வெந்ததும் கரம் மசாலா, வெந்தயம் சேர்த்து கிளறி இறக்கவும். சிக்கன் மணத்துடன் சுவையாக இருக்கும்.

சிக்கன் கடாய் / சிக்கன் கராஹி  (Tips) :


  1. எலுமிச்சைபழச்சாறு ஊற்றினால் சிக்கன் மிருதுவாக ஆகிவிடும் மற்றும் செரிமான பிரச்சனை ஏதும் இருக்காது.
  2. பாகிஸ்தான் சிக்கன் கராஹியில் குடைமிளகாயை சேர்க்க மாட்டார்கள், மாறாக வட இந்திய சிக்கன் கராஹியில் குடைமிளகாய் சேர்ப்பார்கள்.
  3. வெந்தயம் சேர்ப்பது சிறிய மணத்திற்கும், கோழிக்கறியினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்காகவும் வெந்தயம் சிக்கன் கடாய்யில் சேர்க்கிறோம்.


நன்றி 🙏
Share it:

Chicken

Chicken Recipes

Classic

Healthy

Indian Cuisine

Indian Recipes

Masala

Non Veg

North Indian Cuisine

North Indian Recipes

Pakistan Cuisine

Pakistan Recipes

Spicy

Post A Comment: