மெக்ரூன்ஸ் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Macaroons (Indian Style)

Share it:

மெக்ரூன்ஸ் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Macaroons (Indian Style)

மெக்ரூன்ஸ் (இந்தியன் ஸ்டைல்) / Macaroons (Indian Style)


தேவையான பொருட்கள் :

  • முட்டை (வெள்ளைக்கரு) - 4
  • முந்திரிப்பருப்பு (நறுக்கியது) - 250 கிராம்
  • சீனி - 250 கிராம்
  • நெய் - சிறிதளவு

செய்முறை விளக்கம் :


  முட்டை வெள்ளைக்கருவை சிறிதுகூட மஞ்சள் கரு கலக்காமல் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முள்கரண்டி வைத்து வெள்ளைக்கருவை நன்கு நுரை பொங்க கலக்கவும். பாத்திரத்தைக்கவிழ்த்தால் கீழே விழாமல் இருப்பது வரை அடிக்கவும். சீனி போல் பொங்கி வரும், 30 - 35 நிமிடம் ஆகும்.

  சிறிதாக நறுக்கிய முந்திரிப்பருப்பை முட்டை வெள்ளைக்கருவுடன் சேர்த்து நன்கு (Fold on) சுழற்றி சுழற்றி வட்டமாக கொண்டு வரவும், நன்றாக இறுகி வரும் வரை செய்யவேண்டும்.
Macaroon (Fold on) Technique

  நெய் தடவிய தட்டில் இடைவெளி விட்டு ஒரு மேஜைக்கரண்டி கலவையைக் கூம்பு வடிவமாக வரும் மாதிரி ஊற்றி 100 - 150 டிகிரி சூட்டில் ஓவனில் வேக வைக்கவும்.

மெக்ரூன்ஸ் (இந்தியன் ஸ்டைல்) (Tips) :


  1. மெக்ரூன்ஸ்யை எப்பொழுதுமே குளிரூட்டி உண்ணவும் அதன் சுவை நன்றாக இருக்கும்.
  2. பட்டர் கிரீம் இருந்தால் மெக்ரூன்ஸ்யில் அதை தடவி உண்ணலாம்.
  3. மெக்ரூன்ஸ்யில் காற்று குமிழியை வராமல் தவிர்ப்பதற்கு தட்டில் மாவு ஊற்றிய பிறகு 15 - 20 நிமிடம் ஓவனில் வைக்காமல் வெளியில் காய விடவும், அதில் இருக்கும் காற்று வெளியாகிவிடும்.

குறிப்பு : இந்த மெக்ரூன்ஸ்ன் இன்னொரு பெயர் (தூத்துக்குடி மெக்ரூன்ஸ்), ஐரோப்பா மெக்ரூன்ஸ் போர்த்துகீசியர்கள்ளால் தூத்துக்குடி மாவட்டம் (இந்தியாவிற்கு) கொண்டுவரப்பட்டது.
தூத்துக்குடி வந்தபிறகு அதில் முந்திரிப்பருப்பு சேர்த்து தூத்துக்குடி மெக்ரூன்ஸ் ஆக மாறியது.நன்றி 🙏
Share it:

Baking

Biscuit

Cashew

Classic

Cookie

Cookie Recipes

Egg

Egg Recipes

International Recipes

Non Veg

Snack

Snacks

Snacks Recipes

South Indian Cuisine

South Indian Recipes

Sweet Recipes

Sweets

Post A Comment: