நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி | How to make Anchovy Fish Curry

Share it:

நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி | How to make Anchovy Fish Curry

நெத்திலி மீன் குழம்பு / Anchovy Fish Curry


தேவையான பொருட்கள் :

  • நெத்திலி மீன் - 500 கிராம் (1/2 கிலோ)
  • சிறிய வெங்காயம் - 150 கிராம்
  • பச்சை மிளகாய் - 1
  • தக்காளி - 4
  • மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • தனியாத்தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • பூண்டு - 7 பல்
  • தேங்காய் பால் - 1 டம்ளர்
  • வெந்தயம் - 1 டீஸ்பூன்
  • சோம்பு (பெருஞ்சீரகம்) - 1 டீஸ்பூன்
  • புளி - 1 நெல்லிக்கனி அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சள் - சிறிதளவு
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு

    செய்முறை விளக்கம் :

      நெத்திலி மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 15 நிமிடம் ஊற வைக்கவும். சிறிய வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும். இஞ்சியை விழுதாக அரைக்கவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி , வெந்தயம், சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

      புளியை கரைத்து ஊற்றவும். இதில் மஞ்சள், மிளகாய், தனியாத்தூளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும்.

      நெத்திலி மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்துவிடும். குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். கொத்தமல்லி தழை, கருவேப்பிலை தூவி பரிமாறவும், மணமான ருசியான நெத்திலி மீன் குழம்பு தயார்.


    நெத்திலி மீன் குழம்பு (Tips) :
    1. நெத்திலி மீனை சேர்த்த பிறகு அதிகமாக கரண்டியை பயன்படுத்தி கிளறிக்கொண்டிருந்தால் மீன் உடைந்து குழம்பில் கரைந்து விடும்.
    2. எண்ணெய் பிரிந்த பிறகு தான் நெத்திலி மீன் குழம்பை அடுப்பில் இருந்து இறக்கவேண்டும்.


    நன்றி 🙏
    Share it:

    Classic

    Curry

    Fish

    Fish Recipes

    Healthy

    Indian Recipes

    Non Veg

    South Indian Cuisine

    South Indian Recipes

    Spicy

    Post A Comment: