சிக்கன் வறுவல் (பொரிப்பு) செய்வது எப்படி | How to make Chicken Fry

Share it:

சிக்கன் வறுவல் (பொரிப்பு) செய்வது எப்படி | How to make Chicken Fry

சிக்கன் வறுவல் (பொரிப்பு) / Chicken Fry (Varuval)


தேவையான பொருட்கள் :

  • (கோழி) சிக்கன் (நடுத்தர சைஸ்) - 1 கிலோ
  • சோளமாவு - சிறிதளவு
  • மஞ்சள்தூள் - சிறிதளவு
  • இஞ்சி (அரைத்த) - சிறிதளவு
  • பூண்டு (அரைத்த) - சிறிதளவு
  • எண்ணெய் - 500 ml
  • மிளகாய்த்தூள் - 25 கிராம்
  • கரம் மசாலா - சிறிதளவு
  • எலுமிச்சைப்பழம் - 1
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு
  • சிகப்பு கேசரி பவுடர் (தேவையென்றால்) - சிறிதளவு

செய்முறை விளக்கம் :


  கோழிக்கறி துண்டின் மீது இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, சோளமாவு, எலுமிச்சை சாறு, உப்பு, நறுக்கிய கொத்தமல்லி தழை, பளீர் என்று நிறம் தேவைப்பட்டால் கேசரி பவுடர் ஆகியவற்றை நன்றாக கலந்து 1/2 மணி நேரம் அல்லது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  பின்பு இரண்டு, மூன்று துண்டாக எண்ணெய்யில் பொன்னிறமாக எண்ணெய் குமிழி சிறிது அடங்கும் வரை பொரித்து எடுக்கவும்.

  தேவைப்பட்டால் சிறிது கருவேப்பிலை, சோம்பு (பெருஞ்சீரகம்), நறுக்கிய கொத்தமல்லி தழை, இவை அனைத்தையும் தாளித்து பொரித்து வைத்த சிக்கன் மேல் தூவலாம்.

(கோழி) சிக்கன் வறுவல் / பொரிப்பு (Tips) :


  1. தேங்காய் எண்ணெய்யில் பொரித்தால் மிகவும் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
  2. எண்ணெய் குமிழி சிறிது அடங்கியதும், சிக்கன் கருகாமல் பக்குவமாக எடுக்கவும்.
  3. எலுமிச்சை சாறுக்கு பதில் தயிரும் சேர்க்கலாம், இரெண்டையும் சேர்த்தால் சிக்கன் மிக புளிப்பாக இருக்கும்.
  4. எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்ப்பதால் கோழி இறைச்சி மிக மிருதுவாக்கும் மற்றும் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தாது.
  5. குளிர்சாதன பெட்டி இருப்பவர்கள் மசாலா போட்டு கிளறி வாய்த்த சிக்கனை பிரீசரில் வைத்தால் நன்றாக மசாலா சிக்கனில் ஊரும்.


நன்றி 🙏
Share it:

Chicken

Chicken Recipes

Fry

Indian Cuisine

Indian Recipes

Masala

Non Veg

Side Dish

Spicy

Post A Comment: