தேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style)

Share it:

தேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style)

தேங்காய்ப் பால் சூப் (இந்தியன் ஸ்டைல்) / Coconut Milk Soup (Indian Style)

குறிப்பு: உடல் பருமன் ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள், மற்றும் குடல் புன் இருப்பவர்களுக்கும் மிக சிறந்த மருந்து, வாரம் ஒரு முறை இந்த தேங்காய்ப் பால் சூப் சாப்பிட்டால் குணமடையும்.

தேவையான பொருட்கள் :

  • தேங்காய்ப் பால் - அரைமூடியில் எடுக்கப்பட்டது (முழு தேங்காவில் பாதி)
  • பாதாம் பருப்புத்தூள் - 1 மேஜைக்கரண்டி
  • இஞ்சி (சிறிதாக நறுக்கிய) - சிறிதளவு
  • மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 100 மில்லி
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • பீன்ஸ் - 100 கிராம்
  • கேரட் - 100 கிராம்

  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீரை - தேவையான அளவு
  • மிளகுத்தூள் - 1 மேஜைக்கரண்டி

  • கொத்தமல்லித்தழை (நறுக்கிய) - சிறிதளவு

செய்முறை விளக்கம் :


  தேங்காய்யை துருவி அதை தேவைக்கேற்ப்ப தண்ணீர் ஊற்றி சிறிது அரைத்து, நன்றாக அதை பிழிந்து தேங்காய்ப்பாலை எடுக்கவும்.

  வானலியில் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம் சிறிதளவு வதக்கவும், பிறகு நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கேரட், நறுக்கிய தக்காளி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  தக்காளி வதங்கியதும் தேங்காய்ப்பால் ஊற்றி, தேங்காய்ப்பாலை ஒரு கொதி கொதிக்கவிட்டு அடுப்பில் இருந்து இறக்கியவுடன் கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து கிளறிவிடவும்.
சூடாக பரிமாறவும்.

தேங்காய்ப் பால் சூப் (இந்தியன் ஸ்டைல்) (Tips) :


  1. இந்த சூப்பை எப்படி வேண்டும்மானாலும் செய்யலாம், மிளகாய்த்தூள் விருப்பம் என்றல் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து செய்யலாம்  (அல்லது)  வேறு விருப்பமான காய்கறிகளையும் சேர்க்கலாம்.
  2. காய்கறிக்கு பதிலாக இதில் இறைச்சி சேர்க்கலாம், அல்லது இதனுடன் சிறிதாக நறுக்கிய எலும்புயில்லா கோழி இறைச்சி துண்டுகள் சேர்க்கலாம்.
  3. வாரம் ஒருமுறை இந்த சூப் உண்டால் உடலுக்கு மிகவும் நல்லது.



நன்றி 🙏
Share it:

Classic

Coconut

Coconut Recipes

Healthy

Indian Cuisine

Indian Recipes

Soup

Soup Recipes

Veg

Post A Comment: