ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி (சத்தான மற்றும் சுவையானது) | How to make Oats Idli (Nutritious & Tasty)

ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி ? How to make Oats Idli (Nutritious & Tasty) ? Saffola Oats Idli, Quaker Oats Idli, Manna Oats Idli, Lion Oats Idli
Share it:

ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி (சத்தான மற்றும் சுவையானது) | How to make Oats Idli (Nutritious & Tasty)

ஓட்ஸ் இட்லி (சத்தான மற்றும் சுவையானது) / Oats Idli (Nutritious and Tasty)

குறிப்பு: உடல் பருமன் குறைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இதை தினமும் இருமுறை 40 கிராம் அதாவது (1/2 கப்) சாப்பிட்டால் இரும்பு சத்து, எதிர்ப்பு சக்தி, கொலஸ்ட்டரால், உடல் இடை, அதிக ரெத்த அழுத்தம், நீரழிவுக்கு உகுந்த உணவு.

தேவையான பொருட்கள் (ஒரு நபர் உண்பதற்கு) :

  • ஓட்ஸ் - 1/2 கப்
  • ரவை (விருப்பவுள்ளவர்கள்) - 1/2 கப்
  • தயிர் - 1 கப்
  • சமையல் சோடா - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - 1/2 கப் (தேவையான அளவு)

செய்முறை விளக்கம் :

  ஓட்ஸ், ரவை, தயிர், சமையல் சோடா மற்றும் உப்பு ஆகிய பொருட்களை 1/2 கப் தண்ணீரில் கலக்கி, கெட்டியான மற்றும் மென்மையான மாவை தயாரிக்கவும்.

  10 நிமிடம், மாவை நன்றாக ஊற விடவும்.

  மாவு ஊறியபின் இட்லி தட்டில் ஊற்றி 10-15 நிமிடங்கள், ஆவியில் வேக வைக்கவும். சுவையான ஓட்ஸ் இட்லி தயார்.

ஓட்ஸ் இட்லி (Tips) :

  1. கை விட்டு மாவை கலக்கி வைத்தால் சீக்கிரம் மற்றும் நன்றாக ஊறிவிடும்.
  2. தேவை என்றால் இட்லி தட்டில் ஒவ்வொரு இட்லிக்கும் மாவு ஊற்றுவதற்கு முன்பு அதில் முந்திரிப்பருப்பு / பாதாம்ப்பருப்பு துண்டுகள் போட்டு அதன் பின் மாவு ஊற்றலாம்.
  3. தினம் இருமுறை ஓட்ஸ் உண்டால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஜின்க், புரதம், மெக்னீசியம் ஆகிய அனைத்து முக்கிய சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
  4. ஓட்ஸ் (நார்ச்சத்து) அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் இருக்காது.
நன்றி 🙏
Share it:
Next
This is the most recent post.
Previous
Older Post

Batter

Breakfast Recipes

Classic

Dinner Recipes

Healthy

Idli

Indian Cuisine

Indian Recipes

Nutritious

Oil Free

Veg

Post A Comment: